பொள்ளாச்சி, பிப். 16- பொள்ளாச்சியில் இலக்கிய வட்டத்தின் 82 ஆவது இலக் கிய சந்திப்பு மற்றும் நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலக்கிய வட்டத் தின் 82ஆவது இலக்கிய சந்திப்பு வட்ட தலைவர் க.அம்சப் ரியா தலைமையில் நடைபெற்றது. இதில், கவிஞர் கோவை சசிகுமார் எழுதிய பிப்ரவரி 14, கவிஞர் க.ஆனந்த் எழுதிய நிரம்பி வழியும் வெற்றிடங்கள், கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன் எழுதிய தேநீரில் மிதக்கும் ரகசியம், கவிஞர் ஆசு எழு திய நிலம் பருகும் மழை என்கிற நான்கு கவிதைத் தொகுப் புகள் வெளியிடப்பட்டன. ந.பாலமுருகன், நிமோஷினி, கவிக்கவின், சூர்யநிலா ஆகியோர் அறிமுகம் செய்து வைத்துப் பேசினர். மேலும், கவிஞர் அ.கார்த்திகேயன் எழு திய சிறுவனத்தின் பேரரசன் மற்றும் புத்தரின் வரவேற்பரை யில் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் கவிஞர் ச.தி.செந்தில் குமாரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இதனையடுத்து எழுத்தாளர் உதயக்கண்ணன் வாழ்த்தி உரையாற்றினார். தமிழக அரசின் சொல்லின் செல்வர் விருதுபெற்ற சிந்தனைக் கவிஞர் கவிதாசனும், மொழி பெயர்ப்பு விருது பெற்ற மரபின் மைந்தன் முத்தையா வும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில் கௌர விக்கப்பட்டனர். இதனையடுத்து, கவியரங்கத்தில் கவிஞர் களும் மாணவர்களும் கவிதை வாசித்தனர்.